அலோர் ஸ்ட்டார், டிச.10: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பாக அலோர் ஸ்டார் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், குடியிருப்பாளர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிக்கு பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் உதவியுள்ளனர்.
அனாக் புக்கிட்டைச் சேர்ந்த தான் சியு வோங் (54), தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்த வீடு வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தாகக் கூறினார், ஆனால், நவம்பர் 29 முதல் வெள்ளம் காரணமாக தனது வீட்டின் நிலை மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் போல மோசமாக இல்லை என தெரிவித்தார்.
“வெள்ளத்தின் போது,அவர்கள் ஜித்ராவிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியதாகவும் கூறினார்.
"அதிர்ஷ்டவசமாக மற்ற மாவட்டங்களில் இருந்து உதவிக்கு தன்னார்வத் தொண்டர்கள் வந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உணவு, பானங்கள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தனிநபர்களும் உதவி வழங்குவதாக அவர் கூறினார்.
துப்புரவுப் பணிகள் முடிந்து விட்டன. ஆனால், தற்போது எங்களுக்குத் தேவைப் படுவது பண வடிவிலான உதவிகள், ஏனெனில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வசதி குறைந்தவர்கள் ஆவர்," என்று அவர் கூறினார்.


