ஷா ஆலம், டிச 10: சட்ட அமலாக்க அதிகாரிகள் உடல் கேமராக்கள் பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசு அனைத்து பிபிடிகளுடன் ஓர் அமர்வை நடத்தவுள்ளது.
உடல் கேமராக்களின் பயன்பாடு ஒரு நல்ல முறையாகும் என உள்ளூர் அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். ஆனால், அது ஒவ்வொரு பிபிடிகளின் நிதித் திறனைப் பொறுத்து செயல்படுத்தப்படும்.
"இது நாங்கள் முயற்சி செய்யும் ஒரு பரிந்துரை ஆகும். ஆனால் இது பிபிடிகளின் நிதி நிலையை பொறுத்தது. நிதி விகிதம் நல்ல நிலையில் இருந்தால், இத்திட்டத்தை நாம் கட்டங் கட்டமாக செயல்படுத்தலாம்.
"இந்த விவகாரம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு நாங்கள் முதலில் அனைத்து பிபிடிகளுடனும் ஓர் அமர்வை நடத்துவோம்" என்று டத்தோ இங் சுயி லிம் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


