கோலாலம்பூர், டிச 10 - இரண்டு மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்தும் இடத்திற்கு ஏற்பட்ட சண்டையின் போது ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக முதியவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM1,500 அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசன், 68 வயதான எங் ஹெங் சைக்கு தண்டனையை அறிவித்தார். மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
அக்டோபர் 25 ஆம் தேதி காலை 7.34 மணியளவில், ஜாலான் பெரிசா 1, பிரிக்ஃபீல்ட் சாலையோரத்தில் லியோங் சீ லியாங் (42) என்பவரின் வலது கண், கழுத்து, வலது முழங்கால் மற்றும் வலது கையில் காயத்தை ஏற்படுத்தியதாக அம்முதியவர் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 323 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றத்திற்கு இணையான தண்டனையை துணை அரசு வக்கீல் ஷாவிக்க அஸ்வா விக்ரி கோரினார். அதே நேரத்தில் பாதுகாப்பு வழக்கறிஞர் சஸ்வாணி முகமட் சவாவி தனது தரப்பினர் வேலையில்லா வயதானவர் என்ற காரணத்திற்காக சிறிய தண்டனையை வலியுறுத்தினார்.
- பெர்னாமா


