கோலாலம்பூர், டிச. 9- கிளந்தான், கெடா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில்
வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம்
நாடியவர்களின் எண்ணிக்கை இன்று காலை குறைந்துள்ள வேளையில்
பேராக்கில் சற்று உயர்ந்தும் மலாக்காவில் மாற்றமின்றியும் உள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கெடா மாநிலத்தின் கோத்தா ஸ்டார்
மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை
இன்று காலை நிரவரப்படி 60 குடும்பங்களைச் சேர்ந்த 243 பேராக
குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 64 குடும்பங்களைச் சேர்ந்த
254 பேராக இருந்தது.
ஜோகூர் மாநிலத்தில் நேற்றிவு 168 பேராக இருந்த வெள்ள அகதிகள்
எண்ணிக்கை இன்று காலை 109 பேராக குறைந்துள்ளது. இவர்கள்
அனைரும் சிகாமாட் மாவட்டத்திலுள்ள நான்கு நிவாரண மையங்களில்
தங்கியுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 12
குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்
நாடியுள்ளனர். நேற்றிரவு 48 குடும்பங்களைச் சேர்ந்த 111 பேர் நிவாரண
மையங்களில் தங்கியிருந்தனர்.
பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று
உயர்ந்துள்ளது. கிந்தா மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில் உள்ள
மூன்று துயர் துடைப்பு மையங்களில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர்
அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு 116 பேர் மட்டுமே நிவாரண
மையங்களில் அடைக்கலம் நாடியிருந்தனர்.
இதனிடையே, மலாக்கா மாநிலத்தின் ஜாசினில் உள்ள கம்போங்
லஞ்சாங்கில் திறக்கப்பட்டுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் நான்கு
குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


