NATIONAL

இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை - வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

9 டிசம்பர் 2024, 5:50 AM
இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை - வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச. 9- கிழக்கு கடற்கரை உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கடுமையான மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்நிலை  புதன்கிழமை வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பகாங்கில் குவாந்தன், பெக்கான், ஜெராண்டுட், மாரான் மற்றும் ரொம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் திரங்கானுவில் உள்ள கெமாமான் மற்றும் டுங்குன் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மோசமான அளவிலான கனமழை பெய்யும் என்று இன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் அத்துறை கூறியது.

இதே காலகட்டத்தில் கிளந்தான்  மற்றும் பெர்லிஸ் முழுவதுமே எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராக் மாநிலத்தின்   உலு  பேராக்,  மற்றும் கெடா மாநிலத்தின் குபாங் பாசு, கோத்தா  ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக், பாலிங் ஆகிய மாவட்டங்களில் இதே நிலை நீடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தின் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவுப், பெத்தோங், தெமர்லோ ஆகிய மாவட்டங்களும் கடும் வானிலையை எதிர்கொள்ளும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரெங்கானு மாநிலம்  (பெசுட், செத்தியு, கோல நெருஸ், உலு திரெங்கானு, கோல திரெங்கானு மற்றும் மாராங்) மற்றும் ஜோகூர் மாநிலம் ஆகியவையும்  (சிகாமாட், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி) இதே போன்ற வானிலையை  எதிர் கொள்ளும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.