கோலாலம்பூர், டிச. 9- இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மலேசியாவும் புருணையும் வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
புருணை பட்டத்து இளவரசர் அல்-முத்தாடீ பில்லா சுல்தான் ஹசனால் போல்கியாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, கல்வி, எல்லை உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் பேச்சு நடத்தினோம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியான் நாடுகள் மத்தியில் மலேசியாவின் ஆறாவது பெரிய முதலீட்டு பங்காளியாக புருணை விளங்குகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு இரு நாட்டு வர்த்தகம் 204 கோடி அமெரிக்க டாலராக (931 கோடி வெள்ளி) இருந்தது.


