புதுடில்லி, டிச.6 - மலேசியாவிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமாக முறியடித்தனர்.
மலேசியாவிலிருந்து அந்த அரிய வகை உயிரினங்களுடன் விமானத்தில் வந்த இரண்டு பயணிகளும் அவற்றைப் பெற விமான நிலையத்தில் காத்திருந்தவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட 5,193 ஆமைகளை அதிகாரிகள் அன்றைய தினம் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பியதாக சென்னை சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த காலங்களில் பல அரிய வகை உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் அதிகரித்து வரும் செல்லப்பிராணிகளுக்கான தேவை, தென்கிழக்காசிய வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கான சந்தையை அதிகரிக்கச் செய்துள்ளது.


