ஜோகூர் பாரு, டிச. 6: பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 வயது மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படும் வழக்கு தொடர்பான புகாரைப் பெற்றதை ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவுப் செலாமட் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு தொடர்பான புகார் நேற்றைய தினம் தமது தரப்புக்கு கிடைத்ததாகவும், குற்றவியல் சட்டத்தின் 323ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, பள்ளி ஆசிரியர் மாணவர் ஒருவரை அறைந்து, அடித்து, முடியை பிடித்து பள்ளி அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றதாக முகநூலில் வைரலானது.
சமூக ஊடக கணக்கின் உரிமையாளர் அம்மாணவிக்கு பெற்றோர் இல்லாம்ல் சமூக நலன்புரி இல்லத்தில் வசிப்பதால் இந்த செயல் நிகழ்ந்ததா என கேள்வி எழுப்பினார்.
இந்த பதிவு பொது மக்களின் கோபத்தையும் வெளிக்காட்டியது மற்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
– பெர்னாமா


