ஷா ஆலம், டிச.6: ஸ்மார்ட் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் கட்டுமான பணி 2007 ஆம் ஆண்டு முடிவடைந்ததிலிருந்து தலை நகரைத் தாக்கிய வெள்ளத்தைத் சமாளிக்க 600 முறைக்கு மேல் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சுரங்கப்பாதை அமைப்பதற்கு மொத்தம் 1.7 பில்லியன் ரிங்கிட்களை அரசாங்கம் செலவிட்டுள்ளது.இது நகர மையத்தில் வெள்ள அபாயத்தை வெற்றிகரமாகக் குறைத்தது என டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
"2012 ஆம் ஆண்டில் மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPN) ஆய்வின் அடிப்படையில், இந்த முறையின் மூலம் RM4.3 பில்லியன் அளவு இழப்புகள் தவிர்க்கப்பட்டது" என அவர் கூறினார்.
நேற்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேர அமர்வில் வீ. கணபதிராவின் (கிள்ளான்) கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்
அதே நேரத்தில், 2100 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் வெள்ளப் பேரழிவு களை சமாளிக்க 392 பில்லியன் ரிங்கிட் தேவைப் படுவதாக ஃபாடில்லா கூறினார்.
இந்த ஒதுக்கீட்டுத் தொகையில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட 365 வெள்ளத் தணிப்புத் திட்டங்களின் கட்டுமானங்களும் அடங்கும்.
“வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க எரிசக்தி மற்றும் நீர் மாற்ற அமைச்சகத்திடம் (பெட்ரா) போதுமான ஒதுக்கீடு இல்லை.
"எனவே அதன் காரணமாக, கோலாலம்பூரில் 2007 முதல் முடிக்கப்பட்ட ஸ்மார்ட் சுரங்கப்பாதை திட்டத்தில் பெட்ரா திருப்தி அடைந்துள்ளது," என்று அவர் கூறினார்.


