NATIONAL

நாடாளுமன்றத்தில் இவ்வாரம் எட்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

6 டிசம்பர் 2024, 4:26 AM
நாடாளுமன்றத்தில் இவ்வாரம் எட்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

கோலாலம்பூர், டிச. 6 - இவ்வாரம் நாடாளுமன்றத்தில் எட்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 2025 விநியோக (வரவு செலவுத் திட்டம்) மசோதாவும் அடங்கும். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு ஒவ்வொரு அமைச்சு ரீதியாகவும் செயற்குழு நிலையிலான விவாதம் நடைபெற்றப் பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த வாரம் 2024 நிதி மசோதா 2024 வரி வசூல், நிர்வாகம் மற்றும் அமலாக்க நடைமுறை மசோதா, 2024 லபுவான் வர்த்தக நடவடிக்கை வரி (திருத்தம்)(எண்.2) மசோதா, 2024 வர்த்தக வாகன லைசென்ஸ் வாரிய (திருத்தம்) மசோதா ஆகியவையும் நிறைவேற்றம் கண்டன.

இது தவிர 2024 இஸ்லாமிய சட்டத்திற்கான நிர்வாக மசோதா (கூட்டரசு பிரதேசம்)(திருத்தம்), 2024 ஷரியா நீதிமன்ற சிவில் நடைமுறை (கூட்டரசு பிரதேசம்) மசோதா, தேசிய ஊதிய ஆலோசக மன்ற (திருத்தம்) மசோதா ஆகியவையும் நிறைவேற்றப்பட்டன.

இந்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட இணைய மோசடி, நடப்பு வெள்ளம் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாடு முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரும்பணியாற்றிய அரசு இயந்திரத்திற்கு குறிப்பாக 80,000 அரசு ஊழியர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அனைத்துத் தரப்பினரின் வலுவான ஒத்துழைப்பு பேரிடரை எதிர்கொள்வதில் நேர்மறையான அறிகுறியை வெளிப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.