கோலாலம்பூர், டிச 6: டிசம்பர் 8 முதல் 11 வரை கிளந்தான் மற்றும் திரங்கானு முழுவதும் அபாய அளவில் தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கப்படுவதாக என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)தெரிவித்தது.
இதே காலகட்டத்தில் கெடாவில் உள்ள குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் சேனா, பாடாங் திராப், பெண்டாங், சிக், பாலிங் மற்றும் பேராக்கில் உலு பேராக் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கிய தொடர் மழை எச்சரிக்கையும் மெட்மலேசியா வெளியிடப்பட்டது
டிசம்பர் 9 முதல் 11 வரை தொடர் மழை பகாங்கில் கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், மாரான், குவாந்தான், பெக்கான், ரொம்பின் மற்றும் ஜோகூரில் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகியவற்றைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


