NATIONAL

பெண் காசாளர் கத்தியால் குத்தப்பட்டு கொலை வழக்கில் சீனப் பிரஜை கைது

6 டிசம்பர் 2024, 2:55 AM
பெண் காசாளர் கத்தியால் குத்தப்பட்டு கொலை வழக்கில் சீனப் பிரஜை கைது

கோலாலம்பூர், டிச. 6: கடந்த வெள்ளிக்கிழமை செராசில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டர் உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று பிற்பகல் 34 வயதுடைய அப்பெண் தலை நகரில் கைது செய்யப் பட்டார் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

நவம்பர் 30 அன்று பாதிக்கப்பட்டவரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் இடது நுரையீரலில் காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை மரணத்திற்கான காரணங்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

“இதுவரை, கொலைக்கான காரணம் மற்றும் பிரதான சந்தேக நபர் இன்னும் கண்டறியப் படவில்லை,” என்று அவர் கூறினார்.

மேலும், இரண்டு சீன ஆண்கள், இரண்டு பெண்கள் உட்பட நான்கு மியான்மர் பிரஜைகள் மற்றும் ஒரு உள்ளூர் ஆண் அடங்கிய மேலும் ஏழு நபர்களுக்கு எதிரான விளக்கமறியலுக்கான விண்ணப்ப நீட்டிப்பு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

நவம்பர் 29 அன்று, செராசில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் ஒரு சீனப் பெண் கத்தியால் குத்தப்பட்டு இறந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பாதிக்கப்பட்ட 49 வயதான பெண் ஷாப்பிங் சென்டரில் உள்ள ஒரு உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்தார்.

நவம்பர் 30 அன்று, வழக்கை விசாரிக்க உதவுவதற்காக சக ஊழியர்களாக இருந்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை 10 பேர் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.