ஷா ஆலம், டிச 5: நாடு முழுவதும் 4,619 இடங்கள் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடியவையாக எரிசக்தி மற்றும் நீர் மாற்ற அமைச்சகம் (பெட்ரா) அடையாளம் கண்டுள்ளது.
வெள்ளத் தயார் நிலையை அதிகரிப்பதற்கான ஆரம் நடவடிக்கையாக கால்வாய் அமைப்பைப் பராமரித்தல் மற்றும் சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டன என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
"மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும் (ஜேபிஎன்)முக்கிய ஆறுகளில் 534 வெள்ள எச்சரிக்கை சைரன்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை அமைப்பை கண்காணிக்கிறது," என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சரிடம் கிள்ளான் பிரதிநிதி வி கணபதிராவின்(ஹரப்பான்-கிவ்ள்ளான்) கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பெட்ராவின் அமைச்சராகவும் இருக்கும் ஃபாடில்லா, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (நட்மா) மூலம், நாடு முழுவதும் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள மூன்று படிநிலைகளை ஏற்பாடு செய்துள்ளதாக அரசாங்கத்திடம் தெரிவித்தார்.


