ஷா ஆலம், டிச 5: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறைக்கடத்தி துறையில் அரசின் கவனம் எதிர் காலத் தேவைகளுக்கு ஏற்ப மக்களின் நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த நடவடிக்கை வேலை வாய்ப்புகளைப் பாதிக்காது, மாறாக உலகளாவிய சந்தைக்குத் தேவைப்படும் திறமையான மற்றும் அதிக ஊதியம் பெறும் வேலைகளை வழங்குகிறது என்று டத்தோ மந்திரி புசாரின் பத்திரிகைச் செயலாளர் கூறினார்.
சிலாங்கூர் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை (STDC) நிறுவுவதற்கான நிர்வாகத்தின் நடவடிக்கை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் திட்டமிடல் நிகழ்ச்சி நிரல் சரியான பாதையில் செல்கிறது என்பதை நிரூபித்துள்ளது ஜே ஜே டெனிஸ் கூறினார்.
"முதலீட்டாளர்களைச் சந்திக்கும் போது,அவர்கள் விரும்பும் முதல் விஷயங்களில் ஒன்று திறமையான தொழிலாளர்கள் ஆகும்.எஸ் டி டி சி நிறுவுதல் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை அரசு வலியுறுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்
"கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள், டசால்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஃபெஸ்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் STDC ஒத்துழைப்பை நிறுவியதில் நாங்கள் வெற்றியைக் கண்டோம். அடுத்த ஆண்டு கூகுள் உடன் இணைந்து செயல்படும்.
"எனவே, இந்த AI மற்றும் நவீன தொழில்நுட்பம் மனித சக்திக்கு மாற்றாகப் பயன்படுத்த அல்ல, மாறாக இது சம்பளத்தை அதிகரிக்க உதவுகிறது, குறிப்பாக பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஆகும் இது மக்களின் தேவைகளுக்கும் எதிர்காலத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.


