ஷா ஆலம், டிச 5: நவம்பர் 5 முதல் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து (எம்டிஎல்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23,957 மாணவர்கள் வெள்ள தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட மூன்று மாநிலங்கள் கிளந்தான் 17,873, அதைத் தொடர்ந்து திரங்கானு (3,893) மற்றும் கெடா (1,580) என்று கல்வி அமைச்சர் விளக்கினார்.
392 தொடக்கப் பள்ளிகள், 77 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் 1 தொழிற்கல்வி கல்லூரி உட்பட மொத்தம் 470 கல்வி நிறுவனங்கள் ஒரே காலகட்டத்தில் தற்காலிக தங்கும் மையங்களாக மாற்றப்பட்டன என ஃபட்லினா சிடேக் கூறினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சரின் கேள்விகள் அமர்வில் ரோஸ்லான் ஹாஷிம் (பிஎன்-கூலிம் பண்டார் பாரு) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) தன்னார்வ வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆலோசகர்களைக் கொண்ட ஸ்மார்ட் ஆதரவுக் குழுவை (SST) பிபிஎஸ்ஸில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக அணிதிரட்டியதாக ஃபட்லினா மேலும் கூறினார்.
"பிபிஎஸ்ஸில் இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து கற்க உதவுவதற்காக அகாடமிக் சப்போர்ட் டீம் (ஏஎஸ்டி) அனுப்பப்பட்டது.
"குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சு இந்த வெள்ள நிகழ்வை அவ்வப்போது கண்காணித்து வருகிறது" என்று அவர் விளக்கினார்.


