கோத்தா கினபாலு, டிச. 5 - ரிக்டர் அளவில் 2.7 எனப் பதிவான லேசான
நிலநடுக்கம் இன்று அதிகாலை 4.54 மணியளவில் தாவாவ் வட்டாரத்தில்
ஏற்பட்டது.
தாவாவ் நகரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே 4.5 பாகை
மற்றும் கிழக்கே 118.1 பாகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில
நடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை
அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த பூகம்பத்தின் எதிரொலியாக தாவாவ் நகரின் சுற்று வட்டாரத்திலும்
நில அதிர்வு உணரப்பட்டதாக அந்து தெரிவித்தது.
இந்த நில நடுக்கத்தினால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என்று
சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையப்
பேச்சாளர் கூறினார்.
இதனிடையே தஞ்சோங் பத்து லாவுட்டில் உள்ள தங்கள் இல்லத்தில்
இன்று அதிகாலை வேளையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வணிகரான
அன்னா பெஞ்சமின் (வயது 63) கூறினார்.
தாமான் ராயா ஹைட்ஸ் பகுதியிலுள்ள தனது வீட்டில் சுமார் ஐந்து
வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக உணவக உரிமையாளரான
அஸ்மா அனிட் (வயது 48) தெரிவித்தார்.


