சிபு, டிச 4: லாபகரமான கமிஷன் வாக்குறுதியுடன் இணையத்தில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறிய மோசடி கும்பலால் 30 வயதுடைய உள்ளூர் நபர் RM 43,351 இழந்தார்.
அந்நபர் குறிப்பிட்ட அந்த வேலை வாய்ப்பால் ஈர்க்கப்பட்டார். அவருக்கு யூடியூப் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் 'லைக்' பொத்தானை அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது என சிபு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி கூறினார்.
பணி முடிந்ததும்,பாதிக்கப்பட்டவர் RM190 கமிஷன் பெற்றார். ஆனால், அவர் தவறு செய்தததால் அடுத்த பணிக்கு அவருக்கு கமிஷன் தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது. அதனால், கொடுக்கப்பட்ட கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், இரண்டு வெவ்வேறு உள்ளூர் கணக்குகளில் மொத்தம் RM43,351 மதிப்பிலான ஏழு பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளை பாதிக்கப்பட்டவர் செய்தார்.
"பணம் செலுத்திய பிறகு, சந்தேக நபர் RM20,894 தொகையை மற்றொரு பணப் பரிமாற்றம் செய்ய உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்பு போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளதாக சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்டவர் சந்தேகப் படத் தொடங்கியதாகவும், காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார்.
– பெர்னாமா


