பினாம்பாங், டிச.4: நேற்று இரவு 9.13 மணியளவில் பெவர்லி ஹில்லில் காவல் துறையிடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயுதமேந்திய மூன்று குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த மூன்று ஆண் சந்தேக நபர்களும் கொலை உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) தலைவர் டத்தோ அஸ்மி அப்துல் ரஹீம் கூறினார்.
தகவலின் பேரில், சபா காவல் படைத் தலைமையகத்தின் (ஐபிகே) D9 குற்றப் புலனாய்வுத் துறை (சிறப்புப் புலனாய்வு) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு, முதல் தளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.
"அச்சமயம் மூன்று சந்தேக நபர்களுக்கும் சோதனைக் குழுவிற்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் சோதனைக் குழு சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது," என்று அவர் கூறினார்
மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் இந்த மூன்று குற்றவாளிகளும் சரவாக்கில் நடந்த கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுவதாகவும் அஸ்மி கூறினார்.
– பெர்னாமா


