தும்பாட்,டிச 3: நேற்றைய நிலவரப்படி கிளந்தான் முழுவதும் உள்ள தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) மொத்தம் 4,894 தொற்று நோய் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மிக உயர்ந்த எண்ணிக்கையில் 2,923 சுவாச தொற்று மற்றும் 1,367 தோல் தொற்று சம்பவங்கள் கண்டறியப் பட்டுள்ளன என கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் சைனி ஹுசின் கூறினார்.
அதில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகள் (116), கான்ஜுன்க்டிவிடிஸ் (99) மற்றும் வைரஸ் காய்ச்சல் (376) ஆகியவையும் அடங்கும் என்று அவர் கூறினார்.
"அனைத்து வகை நோய்களுக்கும் பிபிஎஸ்ஸில் உள்ள மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
"பெரும்பாலான சம்பவங்கள் பாசீர் மாஸ், மாச்சாங் மற்றும் தும்பாட் பிபிஎஸ்களில் கண்டறியப்பட்டுள்ளன," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை கண்காணிக்கவும், குறிப்பாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்ற நபர்களுக்கு பரவாமல் தடுக்கவும் பிபிஎஸ் முழுவதும் துறையின் பல குழுக்கள் அணிதிரட்ட பட்டுள்ளதாக டாக்டர் சைனி கூறினார்.
– பெர்னாமா


