குவாந்தான், டிச.3: குடும்ப வன்முறை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் மாடல் மற்றும் நடிகையின் கணவர் இன்று முதல் வியாழன் வரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளார்.
46 வயதான அந்நபருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவை மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா தெங்கு கமருசாமான் பிறப்பித்தார்.
36 வயதான முன்னாள் மாடலும் நடிகையுமானவர் வீட்டு வன்முறைக்கு ஆளானதை தெரிவித்தது அடுத்து, விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
குற்றவியல் சட்டப் பிரிவுகள் 506 மற்றும் 323 மற்றும் குடும்ப வன் முறைச் சட்டப் பிரிவு 18 இன் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) ஆஜரான பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில்,முன்னாள் மாடலும் நடிகையுமான அப்பெண் குடும்ப வன்முறைக்கு ஆளாகியதற்குக் அவர் வீட்டை விட்டு வெளியேறி தனித்தனியாக வாழ விரும்பியதே காரணம் ஆகும் என்று நம்பப்படுவதாகப் பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ விரும்பியதால் அவர் தாக்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
முன்னாள் மாடலும் நடிகையுமான இவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தனது காயப்பட்ட முகத்தை வெளிப்படுத்தும் இரண்டு புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
– பெர்னாமா


