கோலாலம்பூர், டிச. 3 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாநிலங்களில் உள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 94,636 பேராகக் குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 99,823 பேராக இருந்தது.
அதே நேரத்தில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு பேராக உள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் நேற்றிரவு 62,507 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 57,790 பேராக குறைந்தது. மொத்தம் 164 தற்காலிக நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, 142 நிவாரண மையங்களில் 25, 907 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 26, 693 பேராக இருந்தது.
இதற்கிடையில், கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நேற்றிரவு நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்ற 7,143 பேருடன் ஒப்பிடுகையில் இன்று காலை 8 மணிக்கு மொத்தம் 7,206 பேர் 42 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) கெடாவின் துணை இயக்குநர் முகமது சுஹைமி முகமது ஜைன் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஇன்று காலை 8.00 மணி நிலவரப்படி 1,056 பேராக அதிகரித்துள்ளது. சிகாமாட் மற்றும் தங்காக் மாவட்டங்களில் மொத்தம் 19 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பேராக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரித்துள்ளது. அங்கு தற்போது 618 பேர் ஒன்பது நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்,


