ஷா ஆலம், டிச 3 - வங்கிகள் கவனக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர்கள் இழப்பீடு பெற முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 413வது பிரிவின் கீழ் வங்கிகள்
இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டப் பிரிவின் கீழ் 178,407 வெள்ளி திரும்பப் பெறப்பட்டுள்ளது. வழிகள் உள்ளன என்பது இதன் பொருளாகும்.
எனினும், இங்கிலாந்து சட்டத் திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டதைப் போல் வங்கித் தரப்பின் கவனக் குறைவு அல்லது அவர்கள் விதிமுறைகளை முறையாகப்
பின்பற்றாதது கண்டறியப்படால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். இந்த
கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நான் ஒப்புக்
கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
கருவூலத்தின் தலைமைச் செயலாளர் தலைமயேற்கும் கூட்டத்தில்,
கண்காணிப்பில் அக்கறை காட்டாத மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத
பட்சத்தில் வங்கிகளை பொறுப்பேற்கச் செய்யும் வகையில்
விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து பரிசீலிக்கவுள்ளோம் என்றார்
அவர்.
மக்களவையில் இன்று பாடாங் தெராப் உறுப்பினர் நுருள் அமின் ஹமிட்
எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு
சொன்னார். மோசடி நடவடிக்கையில் பணத்தை இழந்து வங்கி கணக்கு
உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கும் பொறுப்பினை
வங்கிகளுக்கு வழங்கும் சாத்தியம் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நிகழ்ந்த இணைய
மோசடிக் குற்றங்களில் 122.2 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அன்வார் தெரிவித்தார்.


