NATIONAL

நவம்பர் மத்தியில் வரை 41,906 சட்டவிரோதக் குடியேறிகள் தடுத்து வைப்பு

2 டிசம்பர் 2024, 9:20 AM
நவம்பர் மத்தியில் வரை 41,906 சட்டவிரோதக் குடியேறிகள் தடுத்து வைப்பு

ஷா ஆலம், டிச 2: ஜனவரி முதல் நவம்பர் மத்தியில் வரை மொத்தம் 41,906 சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய குடிவரவுத் துறை தடுத்து வைத்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 18,163 அமலாக்க நடவடிக்கைகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

"மேலும், நாட்டின் சட்டங்களை மீறும் வெளிநாட்டினரைக் கண்டறியவும், கைது செய்யவும், வழக்குத் தொடரவும் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றவும் முக்கியமாக 224 ஹாட்ஸ்பாட் இடங்களில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

"நவம்பர் வரை, இந்தோனேசியாவில் இருந்து குடியேறியவர்கள் அதிகபட்சமாக 12,588 பேர் பதிவாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து பங்களாடேஷ் (7,822) மற்றும் மியான்மரிலிருந்து (7,112 ) பேரும் பதிவாகியுள்ளது" என்று அவர் மக்கள்வையில் கூறினார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டிற்குள் பிரவேசித்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் சட்டவிரோத வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அஜித்தின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டிற்கு வருகை புரிந்த 8.62 மில்லியன் வெளிநாட்டு வருகையாளர்களில் சிங்கப்பூரிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைப் பெற்றுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து வருவதாகவும் ஷம்சுல் அனுவார் கூறினார்.

90 சதவீத வெளிநாட்டு வருவையாளர்கள் மலேசியாவிற்கு பயணம், ஷோப்பிங் மற்றும் குடும்பத்தைப் பார்ப்பது போன்ற சமூக நடவடிக்கைகளுக்காக வருகிறார்கள்.

"மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் நீண்ட கால பாஸ்களை வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாஸின் காலத்திற்கு ஏற்ப மலேசியாவில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

"நவம்பர் 15 வரை செயலில் உள்ள நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 3.07 மில்லியன் ஆகும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.