ஜெம்போல், டிச.2: தாமான் அபு பக்காரில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் முகநூல் வழி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டடு 14,274 ரிங்கிட் நஷ்டம் அடைந்தார்.
பாதிக்கப்பட்ட 54 வயதான நபர் பால் மற்றும் மாவு போன்ற பொருட்களை மலிவு விலையில் விற்பது குறித்து விளம்பரத்தை முகநூலில் பார்த்ததாக ஜெம்போல் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் அச்சலுகையால் ஈர்க்கப்பட்டு விண்ணப்பத்தில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்துள்ளார். விண்ணப்பத்தில் வங்கி கணக்கு எண் மற்றும் பின் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை நிரப்பியுள்ளார்.
"அதன்பிறகு, அவரின் வங்கிக் கணக்கிலிருந்த தொகை அனுமதியின்றி, அதாவது RM5,000, RM5,100, RM2,200 மற்றும் RM1,974.55 மற்ற கணக்குகள் மற்றும் தளங்களுக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்டவருக்கு வங்கியில் இருந்து தகவல் கிடைத்தது. TNG eWallet மற்றும் குறிப்பிடப்பட்ட பிற பெயர்கள் உட்பட பல கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை செமாக் முனையத்தில் சரி பார்த்ததாகவும் ஹூ கூறினார்
இந்த வழக்கு சட்டப்பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


