காலை 10.25 மணிக்கு சுல்தான் மாமுட் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் வரவேற்றார்.
பின்னர் பிரதமர் தெலாகா பாப்பான் தேசிய பள்ளியில் உள்ள துயர் துடைப்பு மையத்தை பார்வையிட்டார். அதன் பிறகு செத்தியூ, மங்கோக் தேசிய பள்ளியின் நிவாரண மையத்திற்கு அவர் வருகை புரிந்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட் திரங்கானு மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 305 நிவாரண மையங்களில் 11,679 குடும்பங்களை சேர்ந்த 43,281 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு 41,409 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.
மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழு செயலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி பெசூட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 16,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து உலு திரங்கானு (7,080 பேர்), டுங்குன் (6,470 பேர்), செத்தியூ (6,332 பேர்), கோல திரங்கானு (2,940 பேர்), கோல நெருஸ் (2,307 பேர்), கெமமான் (1,230 பேர்) மற்றும் மாராங் (775 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.


