கோத்தா பாரு, நவ. 29 - சமூக ஊடகங்களில் வைரலானதானதைப் போல் கிளந்தான் மாநிலத்தின் பெர்காவ் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்ற கூற்றை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) நிறுவனம் இன்று மறுத்துள்ளது.
அணையில் நீர் இயல்பான அளவிலும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக டி.என்.பி. தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கிளந்தான், பெர்காவ் அணைக்கட்டிலிருந்து நீர் திறக்கப்படும் என வைரலான செய்தி உண்மையல்ல என்பதை டி.என்பி. உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறது.
அணையின் சமீபத்திய நிலவரம் சம்பந்தப்பட்ட தகவல்களை நிலைய நிர்வாகம் அரசு நிறுவனங்களுக்கும் ஜெலி மாவட்ட பேரிடர் குழுவிற்கும் தெரிவித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை டி.என்.பி கேட்டுக்கொள்கிறது.
கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் டி.என்.பி. கேர்லைன் முகநூல் அல்லது X @Tenaga Nasional மூலம் தெனாகா நேஷனல் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.


