ஷா ஆலம், நவ 29 – நாளை எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
அவை கிளந்தான், திரங்கானு, பேராக், பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள் ஆகும்.
கிளந்தானில் (துபாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பாஜோக், மஜாங், பாசிர் புத்தே, கோலா கிராய்) ஆகிய இடங்களில் அபாய அளவில் கனமழை பெய்யும் என மெட்மலேசியா தெரிவித்தது.
மேலும், பேராக்கில் (உலு பேராக்), கிளந்தானில் (குவா மூசாங்), பகாங்கில் (ஜெராண்துட், மாரான், குவாந்தான், பெக்கான், ரொம்பின்) ஆகிய இடங்களிலும் இதே வானிலைதான் நிலவும்.
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.


