சிப்பாங், நவ. 29 - வெள்ள அபாயம் உள்ள டெங்கில், சிப்பாங் மற்றும் கே.எல்.ஐ.ஏ. சுற்றுவட்டாரப் பகுதிகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
வெள்ளம் தொடர்பில் இன்று காலை தமது துறைக்கு பல அழைப்புகள் வந்தாகவும் ஆனால் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கே எல்.ஐ.ஏ. தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரஸிப் முகமது ஹரிஸ் கூறினார்.
கம்போங் கிச்சிங்கில் நீர்ப் பெருக்கு அதிகரித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆயினும் தீயணைப்புத் துறை அங்கு நிலைமையை கண்காணித்தது. தண்ணீர் கணுக்கால் வரை மட்டுமே இருந்ததால் மக்கள் வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை என அது ஆலோசனை கூறியது என்றார் அவர்.
மழை நின்றுவிட்ட நிலையில் வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தீயணைப்புத் துறையினர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு எந்தவொரு சூழலையும் எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.


