ஷா ஆலம், நவ. 29 - பரிவு பொருளாதார மையமாக உருவெடுப்பதற்காக
நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்குத் திட்டத்தை சிலாங்கூர்
அரசு வரைந்துள்ளது.
இநோக்கத்தின் அடிப்படையில் சிலாங்கூர் பரிவு பொருளாதாரக் கொள்கை
(டி.பி.என்.எஸ்.)(2024-2030) ஆவணம் நேற்று வெளியிடப்பட்டது. மாநிலத்தில்
“உள்ளடங்கிய, நிலையான மற்றும் வலுவான“ பரிவு பொருளாதாரத்தை
உருவாக்குவதற்கான குறுகிய கால தொலைநோக்குத் திட்டத்தையும்
உள்ளடக்கியுள்ளது.
பரிவுமிக்க சமூகத்தின் கொள்கைகள் மற்றும் பல்வேறு பங்களிப்பாளர்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான மாறும் சுற்றுச்சூழல் அமைப்பை பெருமைப்படுத்தும் ஒரு முற்போக்கான மாநிலமாக மாற்றும் சிலாங்கூரின் பணியை அந்த 74 பக்க ஆவணம் வரையறுத்துள்ளது.
பரிவு தொடர்பான விவகாரங்களில் தேவை மற்றும் விநியோக இடைவெளி மற்றும் இலக்கிடப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பதை இந்த கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கொள்கை ஆக்ககரமான முறையில் அமலாக்கம் காண்பதை உறுதி
செய்ய மாநில அரசு குடும்பங்கள், சமூகம் மற்றும் தனியார் துறையுடன்
இணைந்து செயல்படும்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்திற்கு (ஆர்.எஸ்.1) ஏற்ப மக்களின் சமூக
பொருளாதார தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட சில
அம்சங்கள் இந்த கொள்கை வகுப்பு நடவடிக்கையின் போது கவனத்தில்
கொள்ளப்பட்டதாக அந்த ஆவணம் கூறியது.
சிலாங்கூர் மாநிலம் விவேகமான, வசிப்பதற்கு உகந்த மற்றும் சுபிட்சம்
நிறைந்த மாநிலமாக மாறுவதற்கான பங்களிப்பை இந்த ஆக்ககரமான பரிவு பொருளாதார நடவடிக்கைத் திட்டம் விளங்கும் என்றும் அது குறிப்பிட்டது.


