ஷா ஆலம், நவ 28: தொடர் மழை மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் சுபாங் ஆற்றின் வெள்ள தடுப்பு கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு ஆகஸ்டில் இத்திட்டம் நிறைவடையும் என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்த திட்டம் இடைக்கால பருவமழை காலத்தில் அடிக்கடி பெய்யும் கனமழை மற்றும் நீர் மட்ட உயர்வு உட்பட பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. இது ஆற்றின் விரிவாக்கம் போன்ற கட்டுமானப் பணிகளைத் தடுக்கிறது.
"எனவே, இந்த திட்டத்தை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் நேரமும் செலவும் தேவைப்படுகிறது," என்று அவர் நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.
பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுங்கை சுபாங் வெள்ளத் தணிப்பு திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக இஷாம் கூறினார்.
அக்டோபர் மாத நிலவரப்படி, இத்திட்டம் 18 சதவீதம் நிறைவடைந்துள்ளது.


