கோத்தா பாரு, நவ. 28 - 13 பில்லியன் ரிங்கிட் முதலீட்டில் மலிவு விலை வீட்டுத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த மாதம் வெளியிட உள்ளார் என்று வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் இங் கோர் மிங் தெரிவித்தார்.

இத்தகைய திட்டம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு என்று அவர் விவரித்தார், இது அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் வீட்டு உரிமையை உறுதி செய்வதற்கான ஒற்றுமை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

"இந்த கணிசமான முதலீடு அனைவரும் வீடுகளை பெறுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது, குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்" என்று செய்தியாளர் கூட்டத்தில் இங் கூறினார்.

இத்திட்டம் குறித்த விவரங்கள் பிரதமர் வெளியிடுவார் என்றார்.

நேற்று, 1.3 மில்லியன் அரசு ஊழியர்களில் 688,663 பேருக்கு இன்னும் சொந்த வீடு இல்லை என்றும், பெரும்பான்மையானவர்கள் செயல்பாட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

- பெர்னாமா