கோலாலம்பூர், நவ.28 – நாட்டின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு 86 வயது.
இத்தகவலை அவரது முதன்மை முதலீட்டு நிறுவனமான உசஹகா தெகாஸ் சென். பெர்ஹாட் (Usaha Tegas Sdn Bhd) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
2024 நவம்பர் 28 அன்று எங்கள் தலைவர் திரு. ஆனந்த கிருஷ்ணன் தத்பரானந்தம் அவர்களின் மறைவை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
தேசத்தின் மேம்பாட்டிற்கும் வர்த்தக உலகிற்கும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். மேலும் அவரது கொடையுள்ளம் பலரது இதயங்களைத் தொட்டுள்ளன.
தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிக்கும் குடும்பத்தின் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கை கூறியது.


