ஷா ஆலம், நவ 28: அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்களுக்கும் (PDT) புதிய வேன்களை வழங்குவதன் மூலம், அடுத்த ஆண்டு நிலம் மற்றும் வணிக இட வரி வசூலை RM6 மில்லியனாக அதிகரிக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.
நடமாடும் வரி சேகரிப்பு கவுண்டர்களாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது வேன்களை நன்கொடையாக வழங்கியதில் RM2.69 மில்லியன் செலவாகும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"நாங்கள் 2016 ஆம் ஆண்டிலிருந்து வேன்களை பயன்படுத்த தொடங்கினோம். ஆனால், எட்டு வருடத்திற்கு பிறகு, அவை சேதப் பிரச்சனைகளை ஏற்படுத்தின. இதனால், வரி வசூலிக்கும் நடவடிக்கை தடைப்படுகிறது.
"வரி செலுத்துவோர் மற்றும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் வேனின் அமைப்பை மாநில அரசு மாற்றியுள்ளது," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சிசிடிவி கேமராக்கள், குளிர்சாதன வசதி கூடுதலாக டேஷ்போர்டு கேமராக்கள் மற்றும் மிகவும் வசதியான உள்துறை ஏற்பாடுகள் போன்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் வேனில் பொருத்தப் பட்டிருப்பதாக அமிருடின் மேலும் கூறினார்.
"இந்த வேன்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி வரி வசூலை மேலும் அதிகரிக்க உதவும்" என்று அவர் கூறினார்.


