பாசிர் பூத்தே, நவ 27: இன்று காலை கம்போங் பானிர் பெலிகோங்கில் உள்ள தனது வீட்டில் 33 வயது ஆடவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அந்நபர் அதிகாலை 4.57 மணி அளவில் மின்சாரம் தாக்கி வீட்டின் முன் புறம் உள்ள ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டின் முன் உள்ள சலவை இயந்திர சுவிட்சை அணைக்க சென்றதாகவும், அந்நேரத்தில் பாதிக்கப் பட்டவரின் வீடு ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கி இருந்தது தெரிகிறது.
பாதிக்கப்பட்டவரின் வீடு தாழ்வான பகுதியில் உள்ளது என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 4.57 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கிளந்தான் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதிகாலை 5.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள மரத்தில் சிக்கி நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் தெங்கு அனிஸ் பாசிர் புத்தே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காலை 5.34 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவுற்றது," என்று அவர் தெரிவித்தார்.


