கோத்தா பாரு, நவ 27: கம்போங் பாடாங் லதி, பாச்சோக்கில் இரண்டு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த தஹ்ஃபிஸ் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
முகமட் சியாமில் சனிரன் (14),உடல் சுமார் மூன்று மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என பாச்சோக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (பிபிபி) ஆபரேஷன் கமாண்டர் லோக்மன் யூசோவ் கூறினார்.
பிற்பகல் 3.37 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன் 14 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவரின் உடல் பின்னர் மாலை 4.13 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ``Universiti Sains Malaysia Specialist Hospital (HPUSM)குபாங் கிரியானுக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் கூறினார்
இச்சம்பவத்தை பாச்சோக் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் உறுதி செய்தார்.
- பெர்னாமா


