கோலாலம்பூர், நவ 27: நிதி அமைச்சகம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) ஆகியவை மைசலாம் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகின்றன.
முன்னதாக, 2019 முதல் 2023 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படத் திட்டமிடப்பட்டிருந்த மைசலாம் திட்டம், பட்ஜெட் 2024ன் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்
"மேலும், நிதி அமைச்சகம் மற்றும் BNM ஆகியவை மைசலாம் திட்டத்தை கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அதே நேரத்தில் B40 குழுவால் நீண்ட காலத்திற்கு பெறக்கூடிய காப்பீடு மற்றும் தக்காஃபுல் வழங்கும் புதிய திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
"பட்ஜெட்டில் 2025இல், B40 குழுவின் செலவை குறைப்பதற்கான வவுச்சர்களை வழங்குவதற்காக அரசாங்கம் RM60 மில்லியன் வழங்குகிறது," என்று அவர் மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
மைசலாம் திட்டத்திற்கான நீண்ட கால நடவடிக்கை குறித்து கலாம் சலனின் (பிஎன்-சபாக் பெர்ணம்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், கிரேட் ஈஸ்டர்ன் தக்காஃபுல் பெர்ஹாட் (GETB) ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மைசலாம் ஊழியர்களின் கொடுப்பனவு நவம்பர் 1 முதல் ஒரு நாளைக்கு RM110 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமீர் ஹம்சா கூறினார்.
– பெர்னாமா


