ஷா ஆலம், நவ.27: இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் (ISS) மேம்படுத்தப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மீண்டும் சீரமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் ஒதுக்கீடு அடுத்த ஆண்டு RM35 மில்லியனில் இருந்து RM20 மில்லியனாக குறைக்கப் பட்டாலும், டயாலிசிஸ் சிகிச்சை உட்பட பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
"இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ISS திட்டத்தின் ஒதுக்கீடு குறைப்பு அதன் பெறுநர்களின் நலனை பாதிக்காது. மாறாக, புதிய திட்டங்களின் வழி ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவது உட்பட பல திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"அடுத்த ஆண்டு கிடைக்கும் ஒதுக்கீட்டில், தேவைப்படுபவர்கள் இந்தப் பலனைப் பெறுவது உறுதி செய்வதற்காக டயாலிசிஸ் சிகிச்சை யாளிகளுக்கு புதிய பலனைச் சேர்த்துள்ளோம்.
"RM15 மில்லியன் குறைக்கப்பட்ட போதிலும், ஒதுக்கீடு மற்றும் பெறுநர்களுக்கான பலன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று ஜமாலியா ஜமாலுடின் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.
வழங்கல் மசோதா 2025 இன் இரண்டாம் வாசிப்பின் நிறைவு அமர்வில் பேசிய அவர், கூடுதல் விதிகள் தேவைப்பட்டால், இந்த விஷயத்தை ஆய்வு செய்ய நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.
பட்ஜெட் 2025இல் இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டத்தை தொடர RM20 மில்லியனை ஒதுக்கீடு செய்வதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார் இதன் மூலம்,மக்கள் இறப்பு மற்றும் தீவிர நோய் பாதுகாப்பு நலன்கள் உட்பட அடிப்படை சிகிச்சையை இலவசமாக பெறலாம்.


