ஷா ஆலம், நவ 26: பொதுப் பூங்காக்களை தாமான் ரக்யாட் மடாணியாக மேம்படுத்த சிலாங்கூர் எண்ணம் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் விளையாட்டு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், கலை கலாச்சாரத்திற்கான இடமாகவும் மாறும்.
இப்பகுதி வாசிப்பதற்கான ஆர்வத்தை ஈர்க்க குழந்தைகளுக்கான மினி அறை உட்பட கலை கலாச்சாரம் வளர்ப்பதற்கான இடமாகப் பயன் படுத்தப் படுவதற்கு ஏற்றது என கலை ஆர்வலர், ஃபஸ்லீனா ஹிஷாமுடின் கூறினார்.
"ஒரு கலை மற்றும் கலாச்சார ஆர்வலராக, பொதுப் பூங்காக்களை சமூகத்திற்கு அணுக கூடியதாக மாற்றுவதற்கான சிலாங்கூர் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். இந்தப் பூங்காவை முழுமையாக பயன்படுத்தாவிட்டால் இழப்பு என்றார்.
"என்னிடமும் குல்துஸ் காதா என்ற புத்தகக் கழகம் உள்ளது, அது ஜனவரி 2024 முதல் செயல்பட்டு வருகிறது. பொதுப் பூங்காக்களை புத்தகங்கள் கொண்டுள்ள இடமாக மாற்ற முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
பட்ஜெட் 2025இல், அடுத்த ஆண்டு அனைத்து பிபிடிகளும் குடிமக்கள் பூங்காக்களாக (பொதுப் பூங்கா) உருவாக்கவும் மேம்படுத்தவும் சிலாங்கூர் RM6 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
இந்த நோக்கத்திற்காக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் இருந்து 6 மில்லியன் ரிங்கிட் மானியத்திற்கு மாநில அரசு விண்ணப்பிக்கும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இணையம் போன்ற அடிப்படை வசதிகளுடன், விளையாட்டு வசதிகள், மறுசுழற்சி மையங்கள், கலந்துரையாடல் அறைகள், திரைப்படம் மற்றும் இசை திரையிடும் பகுதிகளாகப் பூங்காக்களை மேம்படுத்தலாம் என்றார்.


