NATIONAL

போதைப்பொருள்கள் கடத்தலில் ட்ரோன்கள்,  55 முயற்சிகள் முறியடிப்பு

26 நவம்பர் 2024, 9:28 AM
போதைப்பொருள்கள் கடத்தலில் ட்ரோன்கள்,  55 முயற்சிகள் முறியடிப்பு

கோலாலம்பூர், நவ 26: ட்ரோன்களைப் பயன்படுத்தி தடுப்பு மையங்களுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 55 முயற்சிகள் இதுவரை முறியடிக்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தாப்பா, பேராக் மற்றும் அலோர் ஸ்டார், கெடா சிறைச்சாலையில் இது தீவிரமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எந்த ட்ரோன்  அகப்படவில்லை என  இன்று மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது  கூறினார்.

"ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் வீசப்படுகின்றன, எனவே, நம்மிடம் ஆண்டி-ட்ரோன்கள் இருக்க வேண்டும். ட்ரோன்களை அழிக்க எங்களிடம் சிறப்பு குழு உள்ளது," என்று அவர் கூறினார்.

நடவடிக்கை மற்றும் சோதனைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதில் அரசாங்கத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) மற்றும் தடுப்பு மையங்களில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கமல் ஆஷாரியின் (பிஎன்- கோலா குராவ்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்

ஒட்டுமொத்தமாக, தடுப்பு மையப் பகுதிக்கு வெளியே 188 போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள்  கண்டறியப் பட்டதாகவும், மேலும் 22 வழக்குகள் தடுப்புப் பகுதிக்குள் இருப்பதாகவும் சைபுடின் நசுஷன் கூறினார்.

எனவே, எங்கள் கண்காணிப்பு கடுமையாக இருப்பதால், பொருட்கள் தப்பவில்லை, நாங்கள் அவற்றை கட்டுப்பாட்டு வாயிலுக்கு வெளியே தடுத்துள்ளோம்," என்று அவர் கூறினார், இந்த நாட்டில் உள்ள 87,000 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.

காவலர்கள், சிறைச்சாலைகள் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகளுக்கு இடையே தகவல் பகிர்வு அதிகரிப்பதுடன், தடுப்புக் காவலில் உள்ள நடைமுறைகள் கடுமையாக்கப் பட்டிருப்பதாக சைபுடின் நசுஷன் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் வரை ரிங்கிட் 228.2 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், நீதிமன்றம் அல்லது துணை அரசு வழக்கறிஞரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு, பொருட்களை அழிக்கும் குழுவால் கையகப் படுத்த படுவதற்கு முன்னர் விசாரணை மற்றும் சோதனை செயல்முறையை முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

புக்கிட் பிலந்தோக், நெகிரி செம்பிலானில் உள்ள குவாலிட்டி ஆலம் எஸ்டிஎன் பிஎச்டியால் அனைத்து போதைப்பொருட்களும் அழிக்கப்பட்டன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.