புத்ராஜெயா, நவ 26: மாவட்டத்தில் பழுதடைந்த வீடுகளை சரிசெய்யும் பணிக்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து சுமார் 6,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவரை சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்தது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்த 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
“சந்தேக நபர் ஜூன் 2021 இல் இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
“நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நகரத்தில் உள்ள பழுந்தடைந்த வீடுகளைப் பழுது பார்க்கும் பணியைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இருந்து சந்தேக நபர் லஞ்சம் பெற்றுள்ளார்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையில், சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமை தொடர்பு கொண்டபோது,குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்தார், குற்றவியல் சட்டப் பிரிவு 165 இன் கீழ் குற்றச் சாட்டை எதிர்கொள்ள ஷா ஆலம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என்றார்.
- பெர்னாமா


