ஷா ஆலம், நவ 26: இந்த ஆண்டு முழுவதும் 617,916 முதியவர்கள் RM150 மதிப்பிலான ஷோப்பிங் வவுச்சர்களை பெற ஸ்கிம் மெஸ்ர ஊசிய திட்டத்தில் (SMUE) உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர்
கடந்த ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 557,215 விண்ணப்பங்களுடன்
ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
"அதிகபட்ச மானிய விநியோகக் காலம் மூன்று மாதங்கள் (பிறந்த தேதியிலிருந்து) ஆகும். நாங்கள் தற்போது டிஜிட்டல் நோக்கி நகர்கிறோம்.அது வவுச்சர்கள் விநியோகத்தை விரைவுபடுத்தும்," என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு முதல் பிறந்த மாதத்தின் அடிப்படையில் ஸ்கிம் மெஸ்ர ஊசிய திட்டத்தின் கீழ் ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை சிலாங்கூர் விநியோகிக்கும் என்று விளக்கினார்.
கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களின் மதிப்பு RM100 இலிருந்து RM150 ஆக அதிகரித்ததைத் தொடர்ந்து ஸ்கிம் மெஸ்ர ஊசிய திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மூன்று மடங்கு அதிகரித்ததாக அன்பால் கூறினார்.
அக்டோபர் வரை, கிட்டத்தட்ட 300,000 முதியவர்கள் தங்கள் பிறந்தநாளை முன்னிட்டு வவுச்சரைப் பெற்றுள்ளனர்.


