ஷா ஆலம், நவ. 26: நாளை முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை சித்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும் சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2024-ஐ கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் வருகைபுரியும் 15 அதிர்ஷ்டசாலிகளுக்கு RM500 ரொக்கப் பரிசும் உண்டு.
இந்நிகழ்வில் நாட்டின் இலக்கிய பிரமுகர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
இவ்வாண்டு இந்நிகழ்வு சிலாங்கூர் கல்வி உச்சிமாநாட்டின் (SES) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் சிலாங்கூர் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு எக்ஸ்போ (SRIE); அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) கண்காட்சி
மற்றும் வோர்ல் ஸ்கில்ஸ் மலேசியா சிலாங்கூர் 2024 ஆகியவற்றின் நிகழ்வுகளும் இடம்பெறும்
முன்னதாக, இந்த ஆண்டுக்கான சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சீனா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தகத் துறையினர் கலந்துகொள்வார்கள் என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பிபிஏஎஸ்) இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமட் தெரிவித்தார்.
2006 முதல் 16 ஆண்டுகளாக நடத்தப்படும் சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியின் தொடர்ச்சியாக, 2022 இல் SIBF முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கி, மாநில அரசு சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்து வருகிறது.


