சுகாய், நவ 26: நேற்று காலை 9 மணியளவில் புக்கிட் கெமுனிங், கிஜால் என்ற இடத்தில் உள்ளுர் பல்கலைக்கழகத்தின் பெண் ஊழியர் ஒருவருக்கு மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட 35 வயதான பெண், 57 மாணவர்கள் மற்றும் 7 அதிகாரிகளுடன் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறை தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.
"பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் புவியியல் மாணவர்களுடன் பாதிக்கப்பட்டவர் புக்கிட் கெமுனிங் வரை களப்பணி மற்றும் ஆய்வுகளை மேற் கொள்வதற்காகச் சென்றார் என்பது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) ஆம்புலன்ஸ் மூலம் கெமாமன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஹன்யன் கூறினார்.
"பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மழைக்காலத்தில் தாமான் எகோ ரிம்பா பகுதியில் எந்தவிதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என ஹன்யான் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
– பெர்னாமா


