ஷா ஆலம், நவ. 26 - தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு நிதியுதவி தேவைப்படும் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர் ஐ-பிஸ்னஸ் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வர்த்தக உபகரணங்கள் வாங்குவதற்கும் வணிக வளாகங்களை புதுப்பிப்பதற்கும் தொழில் முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி வழங்கப்படுவதாக யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் (ஹிஜ்ரா) தெரிவித்தது.
“ஐ-பிசினஸ் ஃபைனான்சிங் திட்டத்தில் 50,000 வெள்ளி வரை கடனுதவி பெற வாய்ப்பு. ஆர்வமுள்ளோர் https://
ஐ-பிஸ்னஸ் திட்டத்துடன் கூடுதலாக, ஐ-பெர்மூசிம் திட்டம், நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டம், கோ டிஜிட்டல் திட்டம் மற்றும் ஜீரோ டு ஹீரோ திட்டம் ஆகிய கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா
அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2015 முதல் மொத்தம் 79 கோடியே 70 லட்சம் வெள்ளி 59,508 ஹிஜ்ரா உறுப்பினர்களுக்கு வர்த்தகக் கடனாக வழங்கப்பட்டுள்ளதாக ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கடந்த மார்ச் 20ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்த நிதியின் மூலம் 60,249 ஹிஜ்ரா தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். இதன் வழி அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்வதற்கும் வர்த்தக உபகரணங்களை வாங்குவதற்கும் வாய்ப்பு கிட்டியதாக டத்தோ மரியா விளக்கினார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஹிஜ்ரா அறவாரியத்தின் ஒன்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தொழில்முனைவோருக்கு 100 கோடி வெள்ளி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


