கோலாலம்பூர், நவ. 25: ஹரிமாவ் மலாயா அணியின் ஆதரவாளர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியான் கோப்பை குரூப் ஏ போட்டிக்கான டிக்கெட்டுகள் புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று முதல் வாங்க தொடங்கலாம்.
திறந்த இருக்கைகளுக்கு RM30, RM50 (கிராண்ட் ஸ்டாண்ட்) மற்றும் RM60 (பிரீமியம்) என விலை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு டிக்கெட் விலை RM 5 மட்டுமே ஆகும் என மலேசிய கால்பந்து சங்கம் (FAM) அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
டிக்கெட்டுகள் www.tickethotline.com.my என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
திமோர் லெஸ்டே வுக்கு எதிராக டிசம்பர் 11ஆம் தேதியும், சிங்கப்பூருக்கு எதிராக டிசம்பர் 20ஆம் தேதியும் மலேசியாவின் அதிரடி ஆட்டத்தை தேசிய மைதானம் நடத்துகிறது.
பாவ் மார்டி விசென்டே அணியானது கம்போடியாவிற்கு எதிராக டிசம்பர் 8 ஆம் தேதி புனோம் பென்னில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும். அதற்கு முன் டிசம்பர் 14 ஆம் தேதி பாங்காக்கில் நடப்பு சாம்பியன் தாய்லாந்தை எதிர்கொள்ளும்.
குரூப் பி பிரிவில் வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.
முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ``timbal balik`` முறையில் நடைபெறும்.
– பெர்னாமா


