(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 25 - மலேசிய, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்க சமூக-
கலாசார அமைப்பு (எம்.எம்.எஸ்.எஸ்.ஒ.) நிதி திரட்டும் நோக்கில் ‘சர்க்கிள்
ஆஃர் லவ்‘ எனும் விருந்து நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு
செய்திருந்தது. இங்குள்ள புக்கிட் கெமுனிங் மாநாட்டு மையத்தில் நேற்று
மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டார்.
மலேசியா, மொரிஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே மொழி,
கலை, கலாசாரம் மற்றும் வர்த்தக உறவுகளையும் புரிந்துணர்வையும்
வலுப்படுத்துவதை இந்த எம்.எம்.எஸ்.எஸ்.ஒ. அமைப்பு பிரதான
நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இது தவிர, இணையம் வழி தமிழ் மொழி வகுப்பு, அனைத்துலக மாநாடு,
ஆசிரியர் பரிமாற்றம், உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட
பயன்மிக்க திட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
சமூக மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வரும் இந்த
அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட
பாப்பராய்டு மிகவும் அற்புதமான முறையில் இந்த நிதி திரட்டும் விருந்து
நிகழ்வு நடத்தப்படுவது குறித்து தாம் பெரிதும் மகிழ்சியடைவதாகக்
கூறினார்.
இந்த விருந்து நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ். ப
தியாகராஜன், எம்.எம்.எஸ்.எஸ்.ஒ. அமைப்பின் நிறுவனரும்
ஆலோசகருமான டத்தோ டாக்டர் எம். பரமசிவம், அமைப்பின் புரவலர் டத்தோஸ்ரீ டாக்டர் ரவிராஜ், தலைவர் கே. குணேஸ்வரி உள்பட திரளான கலந்து கொண்டனர்.


