(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 25 - சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின ஏற்பாட்டிலான
தீபாவளி பொது உபசரிப்பு இங்குள்ள பூச்சோங் 14வது மைல்,
எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக
நடைபெற்றது.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வை கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினருமான இங் ஸீ ஹான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிமி சே
அஸ்மி, சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ அமிருள்
அஜிசான் அப்துல் ரஹிம், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ
யின், சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது
ஜூல்கர்ன்யான் சே அலி, பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹஸ்னுல்
கைடில் முகமது, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான்
அஸ்லான் வான் மாமாட், மாநகர் மன்ற அதிகாரிகள், பணியாளர்கள்,
கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் உள்பட திரளானோர் கலந்து
கொண்டனர்.
இந்த பொது உபரிப்பு நிகழ்வில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்
வகையிலான நடனங்கள், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன.
அறுசுவை விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக
அதிர்ஷ்டக் குலுக்கும் இடம் பெற்றது. அதிர்ஷ்டசாலிகள் கவர்ச்சிகரமான
பரிசுப் பொருள்களைப் பரிசாகப் பெற்றுச் சென்றனர்.


