NATIONAL

சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் அனைத்து சமூகத்திற்கும் வாய்ப்பு மந்திரி புசார் உத்தரவாதம்

25 நவம்பர் 2024, 7:29 AM
சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் அனைத்து சமூகத்திற்கும் வாய்ப்பு மந்திரி புசார் உத்தரவாதம்

செமினி நவ 25 - சிலாங்கூர் மாநிலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதில எந்தவொரு சமூகமும் விடுபடாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்தார்.

சிலாங்கூர் மாநிலம் அனைவருக்குமானது. இதில் யாரும் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் என அவர் உறுதிபடக் கூறினார்.

நாட்டில் தற்போது நம்பிக்கை கூட்டணி அரசுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த ஆட்சி அனைத்து விவகாரத்திலும் சரியாக செயல்படுகிறது என நான் கூற மாட்டேன்.

ஆனால், அனைத்தையும் சரி செய்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்கள் ஆட்சியின் முக்கிய இலக்காக உள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தை பொறுத்த வரையில் இம்மாநிலம் அனைவருக்குமானது. இதில் எந்தவொரு பாகுபாடும் பார்க்கப்படாது. .இவ்விவகாரத்தில் நான் உறுதியாக உள்ளேன் என்று அவர் சொன்னார்.

அண்மையில் 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தேன். இந்த பட்ஜெட்டில் உள்ள திட்டங்களில் வாயிலாக மக்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளேன்.இதில் இந்திய சமுக மக்களும் பயன்பெறுவார்கள். இதை மாநில அரசு உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்தின் தமிழ்ப்பள்ளி, ஆலயங்கள், மக்கள் நலத் திட்டங்கள் என அனைத்திலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று நேற்று

உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகான்,

துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி ராஜன் முனுசாமி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், ஐபிஎப் கட்சியின் தேசிய செயலாளர் மோகன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.