ஷா ஆலம், நவ. 25: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக ஒவ்வொரு வணிக வளாகத்திலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கான தடையை சிலாங்கூர் அமல்படுத்தும்.
இந்த அமலாக்க நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அதிகார வரம்புகள் உட்பட இது தொடர்பான விஷயம் ஆய்வு செய்யப்படுகிறது என சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
"இந்த ஆண்டு நாங்கள் சட்டத்தை கடமையாக்குவதற்கு, அடுத்த ஆண்டிற்கு முன்னர் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஒரு பட்டறையை நடத்தியுள்ளோம். வாய்ப்பிருந்தால் இதில் பிளாஸ்டிக் பையில்லா பிரச்சாரம் உட்பட பல வகையான சட்டங்கள் மற்றும் திருத்தங்களை சேர்க்கலாம்.
"உதாரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் எல்லா வணிக வளாகத்திலும், மினி மார்க்கெட்டிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அனுமதிக்காதது" என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்றும், அது எந்த தரப்பினருக்கும், குறிப்பாக நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் அமலாக்கம் முக்கியமானது என்றும் முன்னாள் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லாய் சியான் கூறினார்.
2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் 20 சென் வசூலித்ததால் ஜூலை மாதம் வரை RM38 மில்லியன் வசூலிக்கப்பட்டது.
மேலும் சேகரிக்கப்பட்ட பணம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நிலையான திட்டங்களுக்கு பயன் படுத்தப்பட்டது.


