ஷா ஆலம், நவ.21: மோட்டார் விளையாட்டுகளை மேம்படுத்தும் முயற்சியாக ரேஸ் டிராக் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.
டிராக் கட்டுமானத்தை செயல்படுத்த பொருத்தமான இடத்தை சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (PTG) தேடி வருவதாக விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"ஆய்வுகளில் பொறியியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் உகந்த பயன்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் அம்சங்கள் அடங்கும்.
"முன்பு சுங்கை துவா, ஜாலான் பங்லிமா பெசார் சுங்கை லுமூட், கம்போங் பாசிர் புத்தே சுங்கை களும்பாங் மற்றும் லெம்பா பெரிங்கின் போன்ற பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் அவை வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல," என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் ரேஸ் டிராக்கை உருவாக்க எதும் இடம் பரிதுரைக்கப் படுள்ளதா உள்ளதா என்பதை அறிய விரும்பிய சுங்கை பஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரசாலி சாரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
2020 ஆம் ஆண்டில் சுங்கை துவாவில் அமைக்க முன்மொழியப்பட்ட ரேஸ் டிராக் கட்டுமானம் குறித்து, ஆலோசகரின் ஆய்வின் முடிவுகள் அதிக விலைக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் பாதிக்கும் காரணிகளால் அதைத் தொடரக்கூடாது என்று பரிந்துரைத்ததாக நஜ்வான் தெரிவித்தார்.


